கோலாலம்பூர் | 18/8/2021 :-
கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களை உட்படுத்திய நான்கு இறப்புகள் பதிவாகி இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தகவல் வெளியிட்டுள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிட்ட அவர், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள 12,993மரண எண்ணிக்கையில், 0.6% அதாவது 80 பேர் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, நாட்டில் கோவிட்-19 தொற்றால் 293 பேர் இறந்துள்ள நிலையில், மொத்தமாக 13,077 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Dalam tempoh lebih 24 jam sehingga tengah hari semalam, sebanyak lagi 293 kematian dicatatkan akibat Covid-19, menjadikan keseluruhan 13,077 kematian.

