Site icon அநேகன்

ஆதரவுக் கடிதம் வாயிலாக நியமிக்கப்படும் பிரதமர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைச் சந்திக்க வேண்டும் ! – மாமன்னர் ஆணை

பெட்டாலிங் ஜெயா | 18/8/2021 :-

ஆதரவுக் கடிதம் வாயிலாகத் நியமிக்கப்படும் பிரதமர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைச் சந்திக்க வேண்டும் என மாமன்னர் கட்டளையிட்டுள்ளார்.

இதன்வழி, அவ்வாறு நியமிக்கப்படும் பிரதமர் மீது பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை கொண்டவராக இருப்பதை உறுதி செய்யப்படும் என மாமன்னர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் வேட்பாளராக ஒரே ஒரு பெயரை மட்டும் குறிப்பிட்டு ஆதரவுக் கடிதத்தை மாமன்னரிடம் கொடுக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது.

இதன்படி, அதிக நம்பிக்கை கொண்ட ஒருவரை மாமன்னர் நியமிக்க வழி வகுக்கும்.

Exit mobile version