Site icon அநேகன்

இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமர் வேட்பாளரா ? தேசியக் கூட்டணியின் நிலைப்பாட்டை மகியாதீன் அறிவிக்கும் வரை பெர்சத்து கட்சியினர் வாயைத் திறக்கக் கூடாது !

பெட்டாலிங் ஜெயா | 18/8/2021 :-

இன்று பிற்பகலிலோ அல்லது மாலையிலோ தேசியக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து அதன் தலைவர் மகியாதீன் முகம்மது யாசின் அறிவிப்பு வழங்குவார் என பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் ஃபயிஸ் நாமன் தெரிவித்தார்.

அந்த அறிவிப்பு வரும் வரையில் பெர்சத்து கட்சியின் உறுப்பினர்கள் வாயைத் திறக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு ஆதரவு வழங்கப்படுமா அல்லது தேசியக் கூட்டணியின் மாறுபட்ட முடிவா என இன்று மகியாதீன் அறிவிப்பார்.

முன்னதாக காப்பேற்புப் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினிடமிருந்து ‘நற்செய்தி’ ஒன்று வரும் என பெர்சத்துவின் தகவல் பிரிவு தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் தெரிவித்தார்.

Exit mobile version