Site icon அநேகன்

விட்டுச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் ஏற்றுக் கொள்ளும் ! மாஹ்ஃபுஸ்

கோலாலம்பூர் | 18/8/2021 :-

முந்தையப் பொதுத் தேர்தலில் வெற்றி கூட்டணியான நம்பிக்கைக் கூட்டணியை விட்டுச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அது மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அமானாவின் துணைத் தலைவர் மாஹ்ஃபுஸ் ஓமார் கூறினார்.

தவறு செய்வது மனித இயல்பு. அதற்காக வருந்துவதற்கும் திருந்துவதற்கும் இடம் உண்டு. அதன் அடிப்படையில் செய்த தவறுக்கு வருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நம்பிக்கைக் கூட்டணிக்கே திரும்பலாம் என மாஹ்ஃபுஸ் தெரிவித்தார்.

மக்கள் வழங்கிய நம்பிக்கையை நிலைநாட்ட அதுவே சரியான முடிவு.

நாம் தேசத்தை மீண்டும் உருவாக்குவோம். திறந்த மனதோடு அவர்களை ஏற்றுக் கொள்ளத தயாராக உள்ளோம் என  அவர் கூறினார்.

இதனிடையே, அன்வார் இபிராகிமை நாட்டின் 9வது வேட்பாளாராக நம்பிக்கைக் கூட்டணி தேர்தெடுத்திருப்பது மிகச் சிறந்த முடிவு எனவும் மக்களின் நம்பிக்கைக்குப் பலன் கிடைத்தது போல இருப்பதாகவும் அவர் சொன்னார்.

Exit mobile version