கோலாலம்பூர் | 16/9/2021 :-
முழு தடுப்பூசி போட்டுக் கொண்ட சாலைப் பயனர்கள் நெடுஞ்சாலையில் உள்ள தேர்தெடுக்கப்பட்ட 7 R&R ஓய்வெடுக்கும் தளங்களிலும் சில தற்காலிக நிறுத்தங்களிலும் ஓய்வெடுக்கலாம். தற்பொழுது தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சில மாநிலங்கள் மாறியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் இயங்கும் R&R ஓய்விடங்கள்:
Restoran Jejantas Sungai Buloh
Hentian Sebelah Simpang Pulai (Arah Selatan)
Mambau (Arah Timur dan Arah Barat)
நாளை முதல் செயல்படும் R&R ஓய்விடம் : Hentian Sebelah Sungai Buloh (Arah Selatan)
சனிக்கிழமை முதல் இயங்கும் R&R ஓய்விடம் : Dengkil (Arah Utara serta Arah Selatan)
PLUS நிறுவனத்தின் வணிகக் கூட்டு நிறுவனங்களில் 80%க்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வடக்கு நெடுஞ்சாலை நிறுவனமான PLUS Malaysia Berhad (PLUS)இன் விற்பனைப் பிரிவு தலைவர் கிறிஸ்டின் லியூ இது குறித்து தெரிவித்தார்.
இனி வரும் வாரங்களில் இன்னும் அதிகமான வணிகக் கூட்டு நிறுவனங்கள் முழுமையான தடுப்பூசி போடப்பட்டு விடும் எனவும் அவர் சொன்னார்.
R&R ஓய்விடங்களில் இயங்கும் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண சாலைப் பயனர்கள் முழுமையானத் தடுப்பூசியைச் செலுத்தி இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்படும். அவர்களுக்கு பச்சை குறியீடு வழங்கப்படும்.
முழுமையான தடுப்பூசி போடப்படாத சாலைப் பயனர்களுக்கு Pre-Order PLUS App எனும் இலவச செயலி வழியும் அல்லது https://orderdisini.plus.com.my/ எனும் இணையப்பக்கம் வாயிலாகவும் உணவை வாங்கும் வசதி PLUS நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் என கிறிஸ்டின் சொன்னார்.

