Site icon அநேகன்

“அரிமா இயக்கம் அரசியல் களம் காணுமா என்று கேட்டால்…” – ஓம்ஸ் தியாகராஜனின் அறிவிப்பு

கோலாலம்பூர் | 19/92/2021 :-

மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கம் – அரிமா எனும் இயக்கம் அரசு சாரா இயக்கமாக அமைக்கப்பட்டது. ஆனால், அஃது அரசியல் களத்திற்குள் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் மாவட்ட / தொகுதி நிலையிலான உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் வகிப்பவர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அவர் அவ்வாறு கூறினார்.

எந்தக் கட்சியிலும் உறுப்பியம் இல்லாதவர்களை மட்டுமே அரிமா ஏற்றுக் கொள்ளும் எனக் கூறிய அவர், ம.இ.கா.வைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல் வேறு கட்சியில் இல்லாதவர்களைச் சமுதாயப் பணி செய்ய வரவேற்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

தேசிய நிலையில் இந்தியர்களின் ஒற்றூமையை மீட்டுக் கொண்டு வர வேண்டும். முறையாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு நிரந்தர ஆற்றலாக அரிமா தமது பணியைச் செய்யும். இந்தியர்களின் தேவைக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்கவும் அரிமா தயாராகும்.

 யாரையும் குறை கூறவோ அல்லது வேறு கட்சிகளை கீழ் தள்ளி மேலே முன்னேறவும் அரிமா எண்ணம் கொண்டிருக்கவில்லை.

தொடக்கக் காலத்தில் ஹிண்ட்ரஃப் எனும் பேராற்றல் உருவெடுத்திருந்தாலும் அதன் நோக்கில் அது முழுதாய்ப் பயணிக்கவில்லை. அதன் விளைவாக நாம் தான் அதன் தாக்கத்தைச் சந்தித்தோம். தற்போது மீண்டும் ஹிண்ட்ராஃப் போலவே ஒரு பேராற்றலை அரிமா இயக்கத்தைத் தளமாகக் கொண்டும் உருவாக்கவும் அது நம் இனத்தின் நிரந்தரக் குரலாகவும் ஒலிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தியாகராஜன் சொன்னார்.

இந்தக் காலத்தில் எந்த அரசாங்கத்திற்கு அரிமா தனது ஆதரவு தர உள்ளது என்பது மிகவும் குழப்பமாக உள்ளது. ஆனால், நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக இருக்கப் போகிறோம் என்பது அப்போதையச் சூழலைக் கொண்டது என ஓம்ஸ் தியாகராஜன் மேலும் சொன்னார்.

Exit mobile version