Site icon அநேகன்

கோவிட்-19 SOP யை மீறும் நிறுவனங்களுக்கு ரிம 1 மில்லியன் வரையில் தண்டம் ! – கைரி

கோலாலம்பூர் | 13/12/2021 :-

நிறுவனங்கள், ஆலைகள், அரசு நிறுவனங்கள் கோவிட்-19 SOPயை மீறினால் தொற்றுநோய் தடுப்பு –  கட்டுப்பாட்டுச் சட்டம் 1998 (சட்டம் 342) இன்படி, ரிம 1 மில்லியன் வரையில் தண்டம் விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

அடுத்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சட்டம் 342 இல் மாற்றங்களும் திருத்தங்களும் விவாதிக்கப்படும் என அவர் சொன்னார்.

மேலும், விதி மீறல்களை ஒருவர் மீண்டும் மீண்டும் செய்தால், அதற்கு விதிக்கப்படும் தண்டனைகள், தண்டங்கள் அதிகரிப்பு அதில் முக்கிய அங்கமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய விதிமுறைப்படி நிறுவனங்கள், ஆலைகள், அரசு நிறுவனங்கள் கோவிட்-19 SOPயை மீறினால் அதிகப்படியாக ரிம 50,000 விதிகப்படுகிறது.

தனிநாபருக்கு ரிம 10,000 தண்டம் நிலைநிறுத்தப்படும்.

கோவிட்-19 விதிமீறல்களைக் குறைக்க சுகாதார அமைசு உட்பட ஊராட்சி மன்றங்கள் வரையில் செயலாக்க அதிகாரிகள் இதனை நடைமுறைப்படுத்தகைந்த சட்ட திருத்தம் மிக மிக அவசியம் என்றார்.

இந்த சட்ட திருத்தத்தால் அதிகார முறை கேடல்களைக் குறைக்கவும் மக்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வரவும் இயலும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version