கோலாலம்பூர் | 14/12/2021 :-
Ikatan Demokratik Malaysia எனப்படும் மூடா கட்சி இன்னும் ப14 நாட்களில் உள்துறை அமைச்சால் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ரிம 10,000 வழக்குக்கானச் செலவையும் உள்துறை அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டும் குறிப்பிடப்பட்டது.
இவ்விவகாரத்தை அக்கட்சி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
முன்னதாக, மூடா ஓர் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட விண்ணப்பிக்கப்பட்டதை உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் மறுத்திருந்தார். அந்த முடிவை எதிர்த்து மூடா கட்சியினர் வழக்கு தொடுத்திருந்தனர்.
அவ்வழக்கு தொடர்பில் இன்று மூடா கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.

