Site icon அநேகன்

பகடிவதை சம்பவங்களை மறைக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ! – கல்வி அமைச்சு

நாடாளுமன்றம் | 14/12/2021 :-

கல்வி அமைச்சின் கீழ் இருக்கும் எந்தப் பள்ளியிலும் பகடிவதை சம்பவங்கள் நடந்து அதை அப்பள்ளி மறைத்தால் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளி தரப்புக்கு அந்தப் பகடிவதைக் குற்றங்கள் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கக் கூடும் என அவர் சொன்னார்.

பள்ளிகளில் நடக்கும் பகடிவதைச் சம்பவங்கள் குறித்த புகார்களைத் தெரிவிக்க கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழி என்ன நடக்கிறது, ந்ன்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெரிய வரும் என அவர் மேலும் சொன்னார்.

உறைவிடங்கள் கொண்ட பள்ளிகளில் நடக்கும் பகடிவதைக் குற்றங்களைக் கையாள புதிய செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version