Site icon அநேகன்

3 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஒரு சீனப்பள்ளிக்கும் 4,000 முகக்கவரிகள், 400 கோவிட்-19 பரிசோதனைக் கருவிகள், 400 முகக்கவசங்கள் ! – டாக்டர் குணராஜ்

செந்தோசா | 14/12/2021 :-

செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஒரு சீனப்பள்ளிக்கும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் முகக்கவரிகள், கோவிட்-19 பரிசோதனைக் கருவிகள், முகக்கவசங்கள் (face shield) ஆகியவற்றை வழங்கினார்.

தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி. ஹைலேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி, ஆகியவற்றோடு ஹின் ஹுவா சீனப்பள்ளிக்கும் அவர் அவற்றை வழங்கினார். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 1,000 1,000 முகக்கவரிகள், 100 கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகள், 100 முகக்கவசங்கள் ஆகிய வழங்கப்பட்டன.

இந்த உதவியை வழங்கிய மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரிக்கு உதவி பெற்றப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் , பள்ளி நிர்வாகங்கள் ஆகியோருடன் டாக்டர் குணராஜ்ஜும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

கோவிட்-19 காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட இந்த உதவி மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அமையும் எனக் குறிப்பிட்டார்.

அதே சமயம், இப்பெருந்தொற்றுக் காலத்தில் தங்கலின் கடமையை மிகவும் பொறுப்புடன் ஆற்றி வரும் ஆசிரியர்களுக்கும் அவர் தமது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்தார்,

இப்புதிய நடைமுறையில் அனைத்து ஆசிரியர்களும் மாணவச் செல்வங்களும்  பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அவர் இறாஇவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version