Site icon அநேகன்

13.1 % பி40 இள வயது பெண்கள் மாத விடாய்க்கால அணையாடை வாங்குவதில் சிக்கல் !

நாடாளுமன்றம் | 15/12/2021 :-

மாத விடாய்க்கால அணியாடை விலை அதிகரிப்பால் தலைநகரில் இருக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த 13.1 விழுக்காடு இள வயது பெண்கள் அவற்றை வாங்குவதில் சிக்கல் எற்பட்டுள்ளதாக பெண்கள், குடும்ப, சமூக நல மேம்பாட்டு அமைச்சு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறுத்து தகவலளித்த அவ்வமைச்சின் துணை அமைச்சர் டத்தோ சித்தி ஸைலா முகம்மட் யூசோஃப் தெரிவிக்கயில்,  PPR  எனப்படும் மக்கல் குடியிருப்புப் பகுதியிலும் சமூகநல மேம்பாட்டு இலாகாவைத் தொடரொஉப் படுத்திய வசிப்பிடத்திலும் உள்ள 13 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டப் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர் எனக் கூறினார்.

மாதவிடாய்க் காலம் தொடர்பான வறுமை நிலை குறித்தும் அதனைக் கையாளும் குறுகிய / நீண்டகாலத் திட்டங்கள் குறித்தும் டத்தோ டி மோகன் எழுப்பியக் கேள்விக்கு துணை அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.

மாதவிடாய்க் காலம் தொடர்பான வறுமை என்பது ஒரு பெண்ணோ அல்லது ஒரு குடும்பமோ பெண்களின் மாதவிடாய்க் கால அணியாடை வாங்க முடியாதப் பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் ஒரு நிலையாகும்.

இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள, பல விழிப்புணர்வு திட்டங்கள், இலவசமாக மாதவிடாய்க் கால அணியாடை வழங்கும் திட்டம் போன்றவற்றை அமைச்சு மேற்கொண்டு வருகிறது என சித்தி ஸைலா சொன்னார்.

13 வயது முதல் 17 வயது வரையிலான இளம் பெண்களுக்கு அவர்கல் படிக்கும் 1,105 பள்ளிக்கூடங்கள் வாயிலாக இலவசமாக தவிடாய்க் கால அணியாடை வழங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.

Exit mobile version