Site icon அநேகன்

ஞாயிறுக்கிழமை காக்கை வேட்டை : பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் ! – MBPJ

ஷா ஆலாம் | 15/12/2021 :-

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் காலை 7.00 மணி முதல் இரவு 7.30 முதல் காக்கை வேட்டை நடத்தப்படும் என பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் வெற்றி பெற பொது மக்கல் ஒத்துழைக்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.

அந்தக் காக்கை வேட்டை மேற்கொள்ளப்படும்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும். அதனால், உரத்த ஒலி எழும்.

எனவே, அந்தக் காக்கை வேட்டை நடத்தப்படும் முக்கிய இடங்களில் பொது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

இதன் பொருட்டு சுகாகாரம், சுற்றுச்சூழல், உராட்சி மன்ற ஊழியர்கள் கண்காணிப்புக்காகப் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version