Site icon அநேகன்

தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான மற்றொரு வழக்கு : கோத்தா பாருவில் 20/3/2022 ஆம் நாள் செவிமெடுப்பு !

கோத்தா பாரு | 15/12/2021 ;-

தமிழ் – சீனப் பள்ளிகளுக்கு எதிராக கோத்தா பாரு உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு அடுத்தாண்டு மார்ச் 20 ஆம் நாள் பிற்பகல் 2.30  மணிக்கு செவிமெடுக்கப்படும்.

மலாய் ஆசிரியர்கள் அமைப்பான Ikatan Guru-Guru Muslim Malaysia (IGMM) தொடுத்துள்ள இந்த வழக்கில் IGMM தரப்பு வழக்கறிஞர் ஷஹாருடின் அலி இது குறித்து தெரிவிக்கயில், நீதிபதி முகம்மட் அபாஸாஃப்ரீ முகம்மட் அப்பாஸ் அவ்வாறு தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இவ்வழக்கு குறித்து அடுத்தாண்டு பிப்பரவரி 28 ஆம் நாளுக்குள் போதிய ஆவணங்களை அத்தரப்பு தயார் செய்து நீதிமன்றத்தில் கொடுத்திருக்க வேண்டும் எனவும் ஷஹாருடின் சொன்னார்.

கடந்த ஆண்டு பிப்பரவரி 20 ஆம் நாள், தாய்மொழிப் பள்ளிகள் இந்நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இருப்பதாக IGMMஇன் தலைவர் முகம்மட் அஸிஸி ஹசான் கோத்தா பாரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

எதிர்த்தரப்பாக மலேசிய அரசாங்கத்தையும் கல்வி அமைச்சரையும் (எந்தக் கல்வி அமைச்சர் எனப் பெயர் குறிப்பிடப்பட வில்லை) குறிப்பிட்டிருந்தார்.

கல்விச் சட்டல் 1996 பிரிவு 17, 28 இன்படி, தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியையும் சீனப் பள்ளிகளில் மண்டரின் மொழியையும் பயிற்றுமொழியாகப் பயன்படுத்துவது மலேசியக் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டப்படி இல்லை எனக் கோரியிருந்தனர்.

கல்விச் சட்டம் 1996, பிரிவு 17இன் படி நாட்டில் இருக்கும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தேசிய வகைப் பள்ளிகளாக வரையறுக்கப்பட்ட தமிழ் – சீனப் பள்ளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என பிரிவு 18உம் குறிப்பிடுகிறது.

அதே சமயம், தேசியப் பள்ளிகளையும் (SK) தேசிய வகைப் பள்ளிகளையும் (SJK) அமைக்கக் கல்வி அமைச்சருக்கு அதிகாரம் உண்டு எனவும் அச்சட்டம் குறிப்பிடுகிறது.

முன்னதாக இதே போன்ற வழக்கைத் தொடுத்துள்ள அமைப்புகள் :

Gabungan Pelajar Melayu Semenanjung (GPMS)
Majlis Pembangunan Pendidikan Islam Malaysia (Mappim)
Gabungan Persatuan Penulis Nasional (Gapena)

Exit mobile version