Site icon அநேகன்

திருத்தம் செய்யப்பட்ட சட்டம் 342 : நம்பிக்கைக் கூட்டணி ஆதரவளிக்காது !

கோலாலம்பூர் | 16/12/2021 :-

இன்று நாடாளுமன்றத்துல் விவாதிக்கப்பட இருக்கும் தொற்று நோய் தடுப்பு – கட்டுப்பாட்டுச் சட்டம் (திருத்தம்) 2021-க்கு நம்பிக்கைக் கூட்டணி ஆதரவளிக்காது என நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில், சட்டம் 342இல் மூன்று திருத்தங்களை சுகாதார அமைச்சு செய்திருந்தாலும் அதனை நம்பிக்கைக் கூட்டணி ஏற்காது என அவர் சொன்னார்.

அச்சட்டத்தில் சில இடங்களில் இன்னும் இரு வேறு நிலைப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் போது முறைகேடுகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 கோவிட்-19 தொற்று குறித்த விதிமுறைகளஐ மீறுகிற தனிநபர் அல்லது அமைப்புக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட அந்தச் சட்டத் திருத்தத்தை அரசாங்கம் மேற்கொள்கிறது.

முன்னதாக, அந்தச் சட்டத்தின்படி, குற்றம் புரியும் தனிநபருக்கு ரிம 100,000 தண்டமும் அமைப்பு அல்லது நிறுவனங்களுக்கு ரிம 1 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்ட வரையறுக்கப்பட்டிருந்தது. அதே சட்டத்தின்கீழ் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையு குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த தண்டங்கள் வாயும் உச்சவரம்பை எட்டி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டவுடன் அச்சட்டம் மீண்டும் சுகாதார அமைச்சால் திருத்தப்பட (தண்டம் குறைக்கப்பட) உள்ளது.

தற்போதைய சட்டம் 342இன் படி, பொது இடத்தில் முகக்கவரியை முறையாக அணியாத, கூடல் இடைவெளியை முறையாகப் பின்பற்றாத  தனிநபருக்கு ரிம 1,000 தண்டம் விதிக்கப்பட மாற்றம் செய்யப்பட்டது.

இந்தச் சட்டத் திருத்தம் குறித்த எதிர்ப்பை பிரதமரிடம் ஒப்படைத்து விட்டாலும் அரசாங்கம் தமது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் சைஃபுடின் கூறினார்.

எனவே, அச்சட்டத் திருத்தத்திற்கு நம்பிக்கைக் கூட்டணி ஆதரவளிக்காது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூலிம் – பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமா சைஃபுடின் சொன்னார்.

ஆகவே, மலேசிய அரசாங்கம் குறிப்பாக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இந்த சட்டத் திருத்தத்தை மீட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசுத்து அச்சட்டத்தை மேம்படுத்தி அனைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version