மூவார் | 16/12/2021 :-
கடந்த வியாழக்கிழமை மூவாரில் இடைநிலைப் பள்ளி மாணவர் ஒருவர் பகடிவதை செய்யப்பட்ட விவகாரத்தில் மலாக்கா, கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர்பாரு ஆகியப் பகுதிகளில் 16 வயது 5 மாணவர்கள் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அளித்த மூவார் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஸஹாருடின் ராசிப், கோலா சுங்கை பாரு (மலாக்கா), காஜாங் (சிலாங்கூர்), கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகியப் பகுதிகளில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
நேற்றுக்கு முந்தைய நாளில் 14 வயது மாணவர் ஒருவர் தமது பள்ளி மூத்தா மாணவர்களால் பகடிவதை செய்யப்ப்பட்டதாக காவல்துறை புகார் பெற்றது.
அச்சம்பவத்தால், இடது பக்க விலா எலும்புப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவரும் அவரது நண்பர்களும் நடந்து கொண்டது பிடிக்காத அந்த மூத்த மாணவர்கள் பகடிவதை இக்குற்றாத்தஐப் புரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்ட மாணவர்கள் மூவார் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட உள்ளனர்.
குற்றவியல் சட்டம் 147 இன் படி விசாரிக்கப்படுவதாகவும் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், 2 ஆண்டுகள் வரை சிறையோ அல்லது தண்டமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இரு போன்ற பகடிவதை சம்பவங்களை காவல்துறை கடுமையான முறையில் கண்டிப்பதாகவும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

