Site icon அநேகன்

தான் ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ம.இ.கா. பணிப்படையின் பிறந்த நாள் வாழ்த்து !

கோலாலம்பூர் | 16/12/2021 :-

இன்று பிறந்த நாள் காணும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மலேசியாவுக்கானத் தேற்காசியா சிறப்புத் தூதருமான தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைபர் இரவீனும் பணிப்படைத் தலைவர் எண்ட்ரூவும் தெரிவித்துக் கொணடனர்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மக்களுடன் நிற்கும் தான் ஶ்ரீ விக்னேஸ்வாரன். நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சோதனைகளை சாதனைகளாக்கி மலேசிய இந்தியர்களுக்கு வழிகாட்டியாய், தணலில் இட்டத் தங்கமாக ஒளிரும் ம.இ.கா.வின் ஒப்பற்ற தலைவர் வாழ்க வளர்க வெற்றிகள் குவிக !

மலேசிய இந்தியர்களின் சமூகநீதிக்காகவும், சமதர்மம் பேணவும், அநியாயச் செயல்களுக்கு எதிராக சமர்க்களத்தில் நின்று அயராமல் போராடி வருகிறார் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன்.

Exit mobile version