கோலாலம்பூர் | 2/1/2022 :-
வடகிழக்கு பருவமழைக் காற்றால் ஏற்பட இருக்கும் பாதிப்பு உட்பட அனைத்துச் சூழலையும் எதிர்கொள்ள தீயணைப்பு மீட்புப் படையினர் உள்ளனர்.
இது குறித்து தகவல் அளித்த வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சர் ரீஸால் மெரிக்கன் நைனா மெரிக்கான் தெரிவிக்கயில், குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரைப் பகுதிகளில் சனவரி 5 வரையில் பெரும் உயர் அலைப் பெருக்கைச் சமாளிக்க அவ்விலாகா தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
இன்று காலை நடத்தப்பட்ட 4,878 முன்னேற்பாடு நடவடிக்கைகளில் 7,527 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

