Site icon அநேகன்

பேராவின் 60 ஊடகப் பணியாளர்கள் கோவிட்-19 கூடுதல் தடுப்பூசி பெற்றனர் !

ஈப்போ | 3/1/2021 :-

பேரா மாநிலத்தில் 13 நிறுவனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 60 ஊடகப் பணியாளர்களுக்கு கோவிட்-19 கூடுதல் தடுப்பூசி போடப்பட்டது.

பேராவின் சமூக நிபுணர் மருத்துவமனையில் உள்ளத் தடுப்பூசி மையத்தில் போடப்பட்டது.

இது குறித்து தகவல் அளித்த அம்மருத்துவமனையின் தலைமைச் செயல்முறை அதிகாரி நிக்கோலஸ் சான், இன்று தொடங்கி கட்டம் கட்டமாக கோவிட்-19 கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

அதில், என்எஸ்திபி, பெர்னாமா, உத்துசான் மலேசியா, தெ ஸ்டார், சினார் ஹரியான், சுவாரா பேரா, ஆர்டிஎம், டிவி3, மலேய் மெயில், ஆஸ்ட்ரோ அவானி, அல்-ஹிஜ்ரா டிவி ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்ற்றன.

இது வரையில் அம்மருத்துவமனைக்கு நாள்தோறும் 400 பேர் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகிறார்கள்.

பெரும்பான்மையினர் கோவிட்-19 கூடுதல் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வருகிறார்கள். அவர்களில் அதிகமானோர் 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர்.

கோவிட்-19 கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆறு மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்த பிறகு, பொது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை அம்மருத்துவமனை பெற்று வருவதாகக் கூறினார்.

கடந்த ஆண்டு மே 31 ஆம் நாள் தொடங்கப்பட்ட அந்தத் தடுப்பூசி மையத்தில் இது வரை கோவிட்-19 கூடுதல் தடுப்பூசிஎலுத்திக் கொண்டோர் உட்பட 40,300 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

Exit mobile version