Site icon அநேகன்

மரங்களை வெட்டுவதை நிறுத்துங்கள் ! மக்களின் குரலைக் கேளுங்கள் !

கோலாலம்பூர் | 5/1/2022 ;-

நாட்டில் பெரும் வெள்ளப் பேரிடர் ஏற்பட்ட பிறகு மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு மாநில – மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சில அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தக் கருத்தை முன் வைத்து Angkatan Belia Islam Malaysia (Abim) அமைப்பும்  Pertubuhan Pelindung Khazanah Alam Malaysia (Peka) அமைப்பும் இணைந்து இணையம் வழி மக்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றன.

மரங்களை வெட்டும் நடவடிக்கை நிறுத்தக் கோரி 200,000க்கும் மேற்பட்ட மக்களின் கையொப்பத்தைப் பெற்றிருக்கும் நிலையில் அவ்வாற நடடிக்கை இயற்கையை அழிக்கும் வகையில் இருப்பதை மக்கள் தெரிவிப்பதாக அந்த இரு அமைப்புகல் கூறின.

இதனால், அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் உட்பட பல இயற்கைப் பேரிடர்கள் நாட்டில் ஏற்படுவதாக ABIM அமைப்பின் தலைவர் முகம்மட் ஃபைஸால் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

எதிர்ப்பாராத விதமாக நேரந்த வெள்ளப் பேரிடருக்கும் இயற்கைச் சூழல். வானிலை ஆகியவற்றின் மாற்றத்திற்கும் மிக நெருங்கியத் தொடர்பு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அம்மாற்றங்கள் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்டவையாகும். இதனால், கணிக்க முடியாத மழைக்காலம் உருவாகிறது. நீர் மட்டம் அதிகரித்து கரை புரண்ட வெள்ளத்தைத் தடுக்கும் முன்னேற்பாடு முறையாக செயல்படாததால் பல சேதங்களை ஏற்படுத்துகிறது,

Malaysian Interfaith Climate Change Network (MICCN) எனப்படும் மலேசிய வானிலை மாற்ற ஆய்வுப் பிணைப்பகத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகம்மட் ஃபைஸால் தெரிவிக்கயில், மரங்களை வெட்டும் நடவடிக்கையாலும் கூட இயற்கை சேதப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

வானிலை மாற்றத்தைக் கையாள மிகவும் எளிமையான, மலிவான வழி, காடுகள்.

வானிலை மாற்றத்திற்கு முக்கியப் பங்களிக்கும் கரியமிடல வளியைத் தன்னகத்தே பிடித்து வைக்கும் ஆற்றல் காடுகளுக்கு உண்டு என அவர் மேலும் கூறினார்.

கடந்த 3ஆம் நாள், காடுகளில் மரங்களை வெட்டும் நடவடிக்கைகளை  உடனடியாக நிறுத்த வேண்டும் என பகாங் மாநில வனத் துறை வெளியிட்ட அறிக்கையைத் தாம் வரவேற்பதாகவும் அதனை மற்ற மாநிலங்களும் பின்பற்றி இயற்கையைப் பாதுக்காக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version