கோலாலம்பூர் | 6/1/2022 :-
தேசிய விளையாட்டு மன்றம் MSN இன் பயிற்சித் திட்டத்தில் இருந்து 144 விளையாட்டாளர்க;இன் சேவை நிறுத்தப்பட்ட முடிவை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என ANGKATAN Muda Keadilan (AMK) கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த சிலாங்கூர் AMK தலைவர் Chua Wei Kiat கூறுகயில், அனைத்துலக நிலையில் முக்குளிப்புப் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்த Cheong Jun Hoong போன்ற தேசிய விளையாட்டாளர்களையும் நிதிப் பிரச்சனை எனக் கூறி நீக்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அப்பயிற்சித் திட்டத்தில் இணைந்துள்ள 432 விளையாட்டாளர்களில், வியாட்னாமில் நடக்கவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியிலும், பெர்மிங்கமில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும், சீனாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பதகங்களை வெள்ளத் தகுதியானவர்கள் எனக் குறிப்பிட்டு 288 பேர் மட்டுமே நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக Chua Wei Kiat சொன்னார்.
MSN இன் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 244 மில்லியன் நிங்கிட் நாட்டின் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் MSNஇன் அப்பயிற்சித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பதக்கங்களை வெல்லும் விளையாட்டாளர்கள் மீது மட்டும் தான் கவனம் இருக்கின்றதா எனவும்
திறமையுள்ள இளம் விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டாமா எனவும் Chua Wei Kiat கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவிட்-19 காரணமாக இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு முந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்திருப்பதைத் தாம் புரிந்து கொண்டதாகக் கூறிய Chua Wei Kiat, இளைஞர் – விளையாட்டு அமைச்சு நிதி நிர்வாக விவகாரத்தில் அறிவார்ந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
வெளிப்புற வசதிக்கான நிதியைக் குறைத்து விட்டு இளம் விளையாட்டாளர்களை உருவாக்கும் நடவடிக்கையில் அமைச்சு செயல்படுவது சாலச் சிறந்ததாகும் என அவர் தமது பரிந்துரையை முன்வைத்தார்.

