Site icon அநேகன்

பள்ளிச் சிற்றுண்டிச் சாலை வாடகை : 2 மாதங்கள் ஒத்திவைப்பு ! – கல்வி அமைச்சு

புத்ராஜெயா | 6/1/2022 :-

அரசுப் பள்ளிகளில் இயங்கும் சிற்றுண்டிச் சாலைகள் இவ்வாண்டு சனவரி, பிப்பரவரி மாத வாடகையைச் செலுத்துவதில் கல்வி அமைச்சு விலக்கு அளித்துள்ளது.

இவ்விவகாரத்தை கல்வி அமைச்சின் திட்டமிடல் – மேம்பாட்டுக்கான துணைத் செயலாளர் நோர் அஸ்மான் அப்துல் இரகுமான் தெரிவித்தார்.

இது குறித்த அறிக்கையை மாநிலத் திணைக்கள இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

“Untuk makluman pihak YBhg. Datuk/Dato’/Dr./Tuan/Puan, KPM bersama-sama dengan agensi berkaitan sedang mempertimbangkan cadangan pelaksanaan inisiatif pelanjutan pengecualian sewaan kantin sekolah untuk tahun 2022.

“Sehubungan itu, pihak YBhg. Datuk/Dato’/Dr./Tuan/Puan dipohon untuk memaklumkan kepada semua pentadbir sekolah di bawah seliaan jabatan supaya menangguhkan terlebih dahulu kutipan sewaan kantin bagi bulan Januari dan Februari tahun 2022 sehingga dimaklumkan kemudian,”.

முன்னதாக, கூடுதல் உணவுத் திட்டத்திற்கு கூடுதல் மானியமும் வாடகை செலுத்த கால அவகாசம் தேவை என மலேசியப் பள்ளிச் சிற்றுண்டிச் சாலை நடத்துநர் சங்கம் கோரி இருந்தது.

கூடுதல் உணவுத் திட்டத்திற்கு கூடுதல் மானியம் வேண்டும் ! வாடகை செலுத்த கால அவகாசம் தேவை ! – பள்ளிச் சிற்றுண்டிச் சாலை நடத்துநர் சங்கம் http://www.anegun.com/?p=54157

Exit mobile version