Site icon அநேகன்

தேர்தலில் 18 வயது வேட்பாளர் : சட்டமாற்றத்தைச் செய்த ஜோகூர் !

இஸ்கண்டார் புத்ரி | 6/1/2022 :-

தேர்தலில் போட்டியிட வேட்பாளர் வயது வரம்பு 21 இல் இருந்து 18 ஆக குறைத்திருக்கிறது ஜோகூர் மாநில அரசு.

Undang-Undang Tubuh Kerajaan 1895 (Pindaan) 2021 எனும் மாநில அரசின் சட்டவிதியில் இந்த மாற்றத்தை இன்று சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.

மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வயது 18 ஆகக் குறைத்துள்ள மாநிலங்கள் பட்டியலில் தற்போது ஜோகூரும் இணைந்துள்ளது.

மூன்றாவது முறை வாசிக்கப்பட்ட அந்த சட்ட மாற்றத்தை மாநில முதல்வர் டத்தோ ஹஸ்னி முகம்மட் முன்வைத்தார்.

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப இந்த சட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட மாற்றத்தால் தேசிய – மாநில நிலையிலான மக்களாட்சி முறையில் பெரும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என ஜோகூர் சட்டமன்ற அவைத் தலைவர் சுஹைஸான் கையாட் தெரிவித்தார்.

Exit mobile version