Site icon அநேகன்

இம்மாதம் நாட்டின் கடன் ரிம 1 திரில்லியனை எட்டும் ! – நஜிப்

கோலாலம்பூர் | 6/1/2022 :-

நாட்டின் கடன் இம்மாதம் ரிம 1 திரில்லியனை (1 இலட்சம் கோடி) எட்டும் என முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் இரஸாக் தெரிவித்தார்.

முன்னதாக, 48.7% ஆக இருந்தக் கடன் விழுக்காடு, கடந்த 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் 64% ஆக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் கடன் தொகை ரிம 686.8 பில்லியனில் இருந்து ரிம 995.3 ஆக அதிகரித்திருந்தது என அவர் சுட்டிக் காட்டினார்.

இன்னும் கொஞ்ச காலத்தில் selamatkan Malaysia எனப்படும் மலேசியாவைக் காப்பாற்றுவோம் நகர்வினரின் கணிப்பின்படி இம்மாதம் அது ரிம 1 பில்லியனை எட்டி விடும் என அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“நாடு காப்பாற்றப்பட்டு விட்டது!” என அவர் கிண்டலாகப் பதிவிட்டுருந்தார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட ரிம 30 பில்லியம் மதிப்பிலான சொத்துடமைகள் விற்கப்பட்டு விட்டதாகவும் ம் பெட்ரோனாசின் ரிம 200 பில்லியன் மதிப்பிலான வருமானமும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் நஜிப் அப்பதிவொல்ன் குறிப்பிட்டிருந்தார்,

கடந்த 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னார் நாட்டின் கடன் விழுக்காடு ஓரளாவே அதிகரித்திருந்தது எனக் குறிப்பிட்ட அவர் உள்நாட்டு உற்பத்தி தர்போது இறங்கு முகத்தைச் சந்தித்திருப்பதாகவும் கூறினார்.

இது தான் நாட்டின் கடனைக் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பொருளா ? எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

Exit mobile version