கோலா சிலாங்கூர் | 6/1/2022 :-
கடமையைச் செய்யும்போது தாம் மிரட்டப்பட்டாலும் சாந்தமாக அந்தச் சூழ்நிலையைக் கையாண்டு பாராட்டைப் பெற்றுள்ளார் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழக அதிகாரி ஒருவர்.
அவரை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் வெலுவாகப் பாராட்டியுள்ளார்.
நேற்று முகநூலில் இஸ்ஸான் ரஷீத் என்பவர் காணொலி ஒன்றைப் பதிவேர்ற, செய்திருந்தார். அந்தக் காணொலியில், பொதுமக்களில் ஒருவர் அந்த அதிகாரியிடம் கத்தி தகாத முறையில் மிரட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அந்தச் சூழ்நிலையை மிகவும் அமைதியாகப் பொறுமையுடன் கையாண்டதைத் தாம் வெகுவாகப் பாராட்டுவதாகவும் சிறந்த எடுத்துக காட்டு எனவும் குறிப்பிட்டார் இங் ஸீ ஹான்.
ஆனால், இது போன்ற சம்பவங்கள் அரசாங்க அதிகாரிகளைத் தங்களின் பணியைச் செய்ய விடாமல் தடுக்கும் நடவடிக்கையாகும். அது விதிமுறையை மீறுவதாகவும் தெரிவித்தார்.

