Site icon அநேகன்

கேசவன் வழக்கு : பிப்பரவரி 28க்குள் எழுத்துப்பூர்வ வாதாங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை

கோலாலம்பூர் | 6/1/2022 :-

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன்  தமது உதவியாளரை அவமானப் படுத்தியது தொடர்பில் தொடுக்கப்பட்ட மான நட்ட வழக்கு கோலாலம்பூர் உயர் நீதி மன்றத்தில் இன்று முழு விசாரணைக்கு வன்ந்தது.

இவ்வழக்கு தொடர்பில் கேசவனின் தரப்பு வழக்கறிஞர்காள் வாதிட மாட்டார்கள் எனவும் எழுத்துப்பூர்வ வாதங்களை மட்டுமே தாக்கல் செய்வார்கள் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் அவ்வாறு கூறியுள்ளது.

இன்று நடந்த இரண்டாவது நாள் வழக்கு விசாரணையின்போது கேசவனின் வழக்கறிஞர் அஸார் அர்மான் அலி நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

 அதே சமயம், இந்த வழக்கில் எந்த சாட்சியையும் அத்தரப்பு தாக்கல் செய்ய வில்லை.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் எழுத்து வடிவிலான வாதங்களை பிப்பரவரி 28க்குள் தாக்கல் செய்து விட வேண்டும் என நீதிபதி அஸிமா ஓமார் ஆணையிட்டார்.

முன்னதாக, பிகேஆர் கட்சி சுங்கை சிப்புட் தொகுதியின் முன்னாள் பொருளாளரான அப்பெண்மணியும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருவர் மீது ஒருவர் காவல் துறை புகார் அளித்துக் கொண்டனர்.

அந்தக் காவல் துறை புகாரில், கடந்த ஆண்டு திசம்பர் மாதத்தில் இருந்தே தாம் கேசவனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அந்தப் பெண்மணி குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பெண்மணியால் தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாக கேசவன் தனது காவல் துறை புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

தாம் பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை எனவும் மாறாக அதப் பெண்மணிதான் தன் மீது ஆசை கொண்டு தொந்தரவு கொடுத்ததாகவும் கேசவன் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி கேசவன் மீது வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு கடந்த மார்ச் 2021 நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

கேசவன் தரப்பில் Armand Ali & Co. வழக்கறிஞர் நிறுவனமும் அந்தப் பெண்மணி தரப்பில் வழக்கறிஞர் ரூபன் மதியவர்ணமும் வாதாடினர்.

Exit mobile version