Site icon அநேகன்

இரமலான் காலத்தில் சிற்றுண்டிச் சாலை மூடப்பட்ட விவகாரம் : முசுலிம் அல்லாத மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது ! – டேசா பண்டான் தேசியப் பள்ளி

கோலாலம்பூர் | 6/4/2022 :-

இங்குள்ள டேசா பண்டான் தேசியப் பள்ளியின் சிற்றுண்டிச் சாலை நோன்பு மாதமான இரமலான் முழுதும் மூடப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்ததோடு பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இது குறித்து அப்பள்ளியின் மாணவர் நலப் பிரிவு துணைத் தலைமையாசிரியர் நோர் ஐனோன் வெளியிட்ட அறிக்கையில், முசுலிம் மாணவர்கள் நோன்பிருக்க ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

“ஒரு வேளை உங்களின் பிள்ளைகள் நோன்பிருக்கவில்லை என்றால், அவர்களுக்கான உணவை வீட்டில் இருந்தே கொண்டு வர பெற்றோர்கள் ஆவண செய்ய வேண்டும்.”

மேலும், பள்ளிக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டில்களையும் கொண்டு அர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசியப் பள்ளிகளீல் இது போன்றா நடவடிக்கை எடுக்கப்படுவது உண்மையானால், அங்குப் பயிலும் இந்திய – சீன – முசுலிம் அல்லாத மாணவர்களின் நிலை குறித்து பல இணையவாசிகளும் சமூக ஆரவலர்களும் விமர்சித்து வந்தனர்.

அந்தப் பதிவு முகநூலில் மிகத் தீவிரமாகப் பகரப்பட்டு வந்தது. 1,000க்கும் மேற்பட்டக் கருத்துகளும் 418 பகிர்வுகளும் அந்தப் பதிவு கொண்டிருந்தது.

முழுமையானத் தகவல் அந்தப் பதிவில் இடம்பெறவில்லை எனவும் இவ்விவகாரத்தை மாவட்டக் கல்வி அலுவலகம் விசாரித்து விட்டதாகவும் அப்பள்ளியின் அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்ட போது தெரிவித்ததாக FocusMalaysia செய்தி வெளியிட்டுருந்தது.

முதன் முறையாக நோன்பிருக்கும் முசுலிம் மாணவர்கள், குறிப்பாக முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆணு மாணவர்களின் நோன்பிருக்கும் முயற்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தொடர்புடையப் பள்ளி நிர்வாகம் விளக்கியது.

பள்ளியின் சிற்றுண்டிச் சாலை மூடப்படும் விவகாரம் குறித்து முசுலிம் அல்லாத 11 மாணவர்களின் பெற்றோரிடம் கலந்து பேசி விட்டது. அவர்கள் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டனர்.

அப்பள்ளியில் பயிலும் 11 முசுலிம் அல்லாத மாணவர்கள் உணவு உண்ண தனி அறாஇ கொடுப்படுவதாகவும் வீட்டில் இருந்து உணவும் தண்ணீரும் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் டேசா பண்டான் தேசியப் பள்ளியின் நிர்வாகம் குறிப்பிட்டது.

Exit mobile version