Site icon அநேகன்

மை செஜாத்ரா பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு

Juliana Edwin scanning the MySejahtera QR code at the Air Selangor headquarters.Ong Soon Hin/ The Star

கோலாலம்பூர் | 13/4/2022 :-

மை செஜாத்ரா செயலியில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.

தற்போது 86 இலட்சம் பயனீட்டாளர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர், அதாவது 30 விழுக்காட்டிற்கு அதிகமாக குறைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த மார்ச் 25ஆம் தேதி தேசிய பணக் கணக்கு செயற்குழு PAC மை செஜாத்ரா பயனீட்டாளர்களின் தரவுகள் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
கூட்டரசு மற்றும் இதர மாநிலங்களில் மை செஜாத்ராவின் பயன்பாடு 26 விழுக்காட்டிலிருந்து 46 விழுக்காடு வரை குறைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

அதோடு, 11 மாநிலங்களில் 30 மை செஜாத்ரா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கு அதிகமாக குறைந்துள்ளது.

Exit mobile version