Site icon அநேகன்

பிரிக்ஃபீல்ட்ஸில் பட்டு வஸ்தரம்! -நிவாஸ் ராகவன் திறந்து வைத்தார்

கோலாலம்பூர், மே 6-

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் புதிய தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவாஸ் ராகவன் தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸில் பட்டு வஸ்தரம் ஜவுளியகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தனது உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் நிவாஸ் இந்த ஜவுளியகத்தைத் திறந்து வைத்து உற்சாகமூட்டினார்.

எண்.84 ஜி, ஜாலான் துன் சம்பந்தனில் அமைந்துள்ள இந்த ஜவுளியகம் தூய பட்டு மற்றும் தூய பருத்தியிலான சேலை மற்றும் வேஷ்டியை வணிகம் செய்கிறது.

கைகளால் நெய்யப்பட்ட காஞ்சிபுர சேலைகள் மற்றும் வேஷ்டிகளைத் தாங்கள் விற்பனை செய்வதாகவும் தரமான பொருட்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் இதன் உரிமையாளர்களில் ஒருவரான பிரபாகரன் கோவிந்தன் தெரிவித்தார்.

“அதே வேளையில் வாடிக்கையாளர்கள் விரும்பினால் சேலை மற்றும் வேஷ்டியில் அவர்களின் புகைப்படங்களையும் நாங்கள் பதிப்போம். இவர்களின் தேவையே எங்களின் மனநிறைவு” என்றார் அவர்.

“திருமணம் மற்றும் அனைத்து வகை விழாக்களுக்குப் பொருத்தமான சேலை மற்றும் வேஷ்டியை மக்கள் இங்கு தேர்ந்தெடுக்கலாம். தூய பட்டு மற்றும் பருத்தியில் தயாரிக்கப்பட்ட சேலை மற்றும் வேஷ்டிக்கு மக்கள் எங்களை நாடலாம்” என்று பிரபாகரன் மேலும் விவரித்தார்.

தொடக்கக் கட்டமாக இவ்வட்டாரத்தில் சுமார் 40 விழுக்காடு வாடிக்கையாளர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களைக் கவரும் ஒரு ஜவுளியகமாக பட்டு வஸ்தரம் திகழும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் மேலும் இரண்டு பங்குதாரர்கள் சரவணக்குமார் ரெங்கநாதன், மோகன் கோவிந்தன் ஆவர்.

தலைநகர் வாழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான நூ சென்ரலுக்கு எதிர்ப்புறம் (சிட்டி சென்ரல் ஹோட்டல் அருகில்) அமைந்துள்ளது பட்டு வஸ்தரம் ஜவுளியகம்.

Exit mobile version