Site icon அநேகன்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 59 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் நால்வருக்குத் தங்க விருது

கோலாலம்பூர், மே. 9-

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 59 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் நான்கு இலக்கியவாதிகளுக்குத் தங்க விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

ஈப்போ கவிஞர் மு. ஆசைத்தம்பிக்கு “தமிழவேள் கோ. சரங்கபாணி” விருதும் எழுத்தாளர் அமரர் சந்திரா குப்பனுக்கு “தனிநாயக அடிகளார்” விருதும் எழுத்தாளர் ப. மணிவாசகத்திற்கு “பத்திரிகைத்துறை பிதாமகன் எம். துரைராஜ்” விருதும் கவிஞர் எம். கருணாகரனுக்கு “தமிழவேள் ஆதி. குமணன்” விருதும் ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில அரசு முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ வி.எல். காந்தன், தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன் ஆகியோர் இவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தனர்.

விருது பெற்றவர்களின் சிறப்புகளைச் சங்கத்தின் பொருளாளர் ஞான சைமன் வாசித்தார்.

இதனிடையே மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகள் இன்று தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக நமது எழுத்தாளர்கள் பலர் தமிழ்நாட்டு மாணவர்களியே நன்கு அறிமுகமாகியுள்ளனர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் எனக்கும் இந்த முன்னெடுப்பில் முழுமையான பங்களிப்பு உள்ளது என்பதை பெருமையோடு கூறுவதில் மகிழ்கிறேன் என்று பெ. இராஜேந்திரன் கூறினார்.

ஊடகவியலாளர்களை சிறப்பித்தபோது…

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழ் இலக்கியம் வளர்ச்சி கண்டு வருகிறது. எழுத்தாளர்கள் அதிகமாக வாசிக்கவேண்டும். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய கதைகளையும் கவிதைகளையும் படைப்பாளர்கள் இப்போது தாங்கள் எழுதும் படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது மிகவும் முக்கியமாகும்.

தங்களின் எழுத்துகளில் எந்தவித மேம்பாடும் இல்லையென்றால் அவர்கள் தொடர்ந்து எழுதுவதில் அவர்களுக்கோ சமுதாயத்திற்கோ பயனில்லை இலக்கிய வளர்ச்சிக்கு அது துணைபுரியாது என்று பெ. இராஜேந்திரன் தெரிவித்தார்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 60ஆம் ஆண்டு மணிவிழாவில், முன்னாள் தலைவர் பெ. ராஜேந்திரனுக்கு மணிவிழா நாயகம் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக மலேசிய இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட எழுத்தாளர்களுக்கும் ஊடகவியாளர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மின்னல் பண்பலையில் முன்னணி அறிவிப்பாளர் திரேசா மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.

Exit mobile version