டோக்கியோ, மே. 27
விபத்துகள், விபத்துக்களில் சிக்கிய தனிநபர்கள் அல்லது தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும் மீட்புக்கான ஆராய்ச்சி உட்பட மேம்பாட்டு வசதியை உருவாக்குவதற்கு PERKESO ஜப்பானின் Cyberdyne Inc நிறுவனத்துடன் ஒத்துழைக்கும் என மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் கூறியுள்ளார்.
இந்த வசதி பேராக்கில் கட்டப்படவுள்ள பெர்கேசோ மறுவாழ்வு மையத்தை அடிப்படையாகக் கொண்டது. அதோடு தனிநபர்களுக்கு சிகிச்சையளிப்பதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் வழங்குவதில் முன்னோடியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த திட்டமிடப்பட்ட மையம் தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு முழுமையாகப் பயனளிக்கும் மையமாக உருவாகும். மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் National Neuro-Robotics and Cybernetics Rehabilitation facility எனப்படும் தேசிய நியூரோ-ரோபாட்டிக்ஸ் மற்றும் சைபர்நெட்டிக்ஸ் மறுவாழ்வு வசதியை நிறுவுவதற்கான முன்னோடியாக இந்த மையம் இருக்கும் என ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

