Site icon அநேகன்

தான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு தூணாக நிற்போம்! – நடராஜா சண்முகம்

சுங்கை சிப்புட், மே 28

சுங்கை சிப்புட் தொகுயில் இந்தியர்களின் மேம்பாட்டிற்கு ஆக்கப் பூர்வ உதவிகள் பல செய்து வரும் டான்ஸ்ரீ எஸ் ஏ. விகனேஸ்வரனுக்கு பக்க பலமா இருந்து செயலாற்றுவோம் என்று K. EDGE SDN. BHD. நிறுவனத்தின் தொழில் அதிபர் நடராஜா சண்மும் வலியுறுத்தினார்.

அந்த வகையில் இந்த வட்டாரத்தில. உள்ள தமிழ்பள்ளிகளின் மேம்பாட்டிறகு கவனம் செலுத்தி வருவதுடன் மாணவர்களின் கல்வி தேவைகளுக்கு உதவிக் கரம் நீட்டி வரும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு தொடர்ந்து ஆதரவு வரங்குவதின் வழி மேலும் அதிகமான உதவிகளை பெற வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார்.

சுங்கை சிப்புட் டோவன் பி தோட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழாவில் உரையாற்றியப பின்னர. செய்தியாளர்கள் கூட்டத்தில இதனை வலியுறுத்தினார்.

எதிர் வரும் பொதுத் தேர்ரதலில் சுங்கை நாடாளுமன்றத் தொகுதியை வெற்றிப பெற அனைவரும் ஆதரவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பேசிய தொழில் அதிபர் நடராஜா சண்முகம் சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட்டாக செய படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் பிள்ளைகளின் கல்வி ற பெற்றோர்கள் கண்காணிக்கவேண்டும் என்றார்..

எதிர்காலத்தில் இந்திய சமுகம் சிறந்த்தொரு சமுகமாக உருவாகவேண்டுமென்றால் கல்வி மிக அவசியம். கல்வியின் வழியே சிறந்ததொரு சமுகத்தை காண முடியும் என்று வலியுறுத்தினார்.

இங்கு இந்த நிகழ்வில் இப்பள்ளிக்கு நடராஜா சண்முகம் வெ. 7 ஆயிரம் நிதி மற்றும் மடிக்கணியை வழங்கினார்.

இங்கு இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கணேசன் பச்சையப்பன் நன்றியைக் கூறிக்கொண்டார்.

Exit mobile version