Site icon அநேகன்

பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தலைவராக தாமோதரன் தேர்வு

கோம்பாக், ஜூன் 1-

பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தலைவராக யு. தாமோதரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பேரின்பம் மலேசியா இயக்கத்தின் ஆண்டு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

அதில் இவ்வியக்கத்தின் தோற்றுநர் தாமோதரன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கராத்தே மாஸ்டர் டத்தோ அறிவழகன் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வேளையில் மாரிமுத்து, மல்லிகா ஆகியோர் உதவித் தலைவர்களாக தேர்வு பெற்றனர்.

செயலாளராக குபேரன், பொருளாளராக தேவராஜ், துணைப் பொருளாளராக தனபாலன், இளைஞர் பிரிவுத் தலைவராக குணா, மகளிர் பிரிவு தலைவியாக மோகனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பாரதிதாசன், வாசுதேவன், ஜெயராமன், டாக்டர் சந்திரகாந்த், யுவராஜா, விஜயலட்சுமி, ஜெயஸ்ரீ செல்வேந்திரன் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய தாமோதரன், இவ்வியக்கம் தொடக்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

பேரின்பம் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை புதிய நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தாமோதரன் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version