Site icon அநேகன்

மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவராக எஸ் ஆனந்தன் போட்டியின்றி தேர்வு!

ஈப்போ, ஜூன் 5-

மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவராக எஸ் ஆனந்தன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக எல். கோமகன் . உதவித் தலைவர்களாக எஸ். சத்தியசீலன் , நாச்சியா ரூபனி, எஸ் டெனிஷ் மாறன் , செயலாளராக கிஷோர் குமார் , பொருளாளராக பி.யூவராஜன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

நாட்டில் இளைஞர் மன்றங்களில் உறுப்பியம் பெறும் நபர்களின் வயது வரம்பு 40லிருந்து 30 ஆகக் குறைக்கச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. என்பதை மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஆனந்தன் சுட்டிக் காட்டினார்.

இதனால் இளைஞர் மன்றங்களின் இணைய அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இளைஞர் மன்றங்களை வலுவுள்ள இயக்கமாக உருவாக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இளைஞர் மன்றங்களில் உறுப்பிய வயது 30 ஆக அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதால் 30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் உறுப்பிய அந்தஸ்தை இழக்க நேரிடுவதால் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ( 15 வயதிலிருந்து 30 வயதிற்கும் உட்பட்டவர்களை) அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இங்குள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 56 ஆவது ஆண்டுகள் கூட்டத்தில் ஆனந்தன் ஆற்றிய தலைமை உரையில் இவ்வாறு பேசினார்.

உச்சமன்ற உறுப்பினர்களாக

K. Suthershen
Y. Yamunna
K. Vivaindran Chettiar
M. Kabelan
A. Vichitra
S. Vasudevan
G. Yuvanraj
A. Preeya
R. Geetha
L. Kamalapriya ஆகியோர் தேர்வு பெற்றனர்

கணக்காய்வளராக
P. Sivachandran
M. Poobalan தேர்வு பெற்றனர்.

ஏ. மோகவிக்னன் நிரந்த தலைவராகவும், துணைத் தலைவராக என் டினேஷ்குமார் ஆகிய இருவரும் தேர்வாகினர். இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 300 பேராளர்கள் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version