Site icon அநேகன்

தாஜுடின் மீது ஒழுங்கு நடவடிக்கையா? ஸாஹிட் பதில்

Former deputy prime minister Datuk Seri Dr Ahmad Zahid Hamidi arrives at the Shah Alam High Court for his corruption trial in connection with the Foreign Visa System (VLN). .— KK SHAM/The Star

கோலாலம்பூர், ஜூன் 28-

டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் தனது செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கப்படலாம் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

தாஜுடின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை ஒழுங்கு நடவடிக்கைக் குழுதான் முடிவு செய்யும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பாசிர் சலாக் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான தாஜுடின், ஸாஹிட் கட்சியை வழிநடத்தினால், பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வியனையுமென நேற்று கூறியிருந்தார்.

அதோடு 2020 மே மாதம், அம்னோ தலைவர் பதவியிலிருந்து ஸாஹிட்டை நீக்கம் செய்வதற்கான கூட்டம் அவரது இல்லத்தில் நடந்ததாகவும், அதில் டத்தோஶ்ரீ நஜிப், டத்தோஶ்ரீ முகமட் ஹாசன், டத்தோஶ்ரீ காலிட் நோர்டின் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தாஜுடின் சுட்டிக் காட்டியிருந்தார்.

ஏதேனும் அறிக்கை, கோரிக்கை அல்லது விசாரணை தேவைப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையை வழங்கும் என்று அஹ்மட் ஸாஹிட் கூறினார்.

அந்த பரிந்துரையை அம்னோ உச்ச மன்றம் முடிவு செய்யுமெனக் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாஜுடின் கூறியது போல் தன்னை பதவி நீக்கம் செய்யும் கூட்டம் பற்றி தனக்குத் தெரியாது என்றும் அஹ்மட் ஸாஹிட் கூறினார்.

Exit mobile version