கோலாலம்பூர், ஜூன் 29-
திங்கள்கிழமை (ஜூன் 27) அதிகாலை ஸ்ரீ பெட்டாலிங் கடையின் முன் சண்டையிட்ட 20 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் ராடின் பகுசில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பிரிக்ஃபீல்ட்ஸ் ஓடிபிடி உதவி ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.
“20 பேரும் இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் இரும்பு கம்பிகள் மட்டுமின்றி பீர் பாட்டில்களுடன் ஆயுதம் ஏந்தியிருந்தனர்,” என்று அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த சம்பவத்தின் போது அங்கிருந்த காரை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து போலிஸ் புகாரை பெற்றுள்ளதாகவும் குற்றவியல் சட்டம் பிரிவு 427ன் கீழ் விசாரணை நடத்தி வருவதாகவும். அவர் மேலும் கூறினார்.
தகவல் தெரிந்தவர்கள் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறையின் ஹாட்லைன் 03-22979222, KL போலீஸ் ஹாட்லைன் 03-21159999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி அமிஹிசாம் கேட்டுக் கொண்டார்.

