ஈப்போ, ஜூலை 10-
பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் மைபிபிபி கட்சி பேராக்கில் 30 தொகுதிகளில் போட்டியிடுவதாக மைபிபிபி கட்சி தேசியத் தலைவர், டான்ஸ்ரீ கேவியஸ் தெரிவித்தார்.
மைபிபிபி கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. அதிலும், பேராக்கில் மைபிபிபி கட்சி தடம் பதித்துள்ளது. டாக்டர் இருதயம் செபஸ்தியர் பல சேவைகளை ஆற்றி வருகிறார் என ஈப்போ பாராட் மைபிபிபி கலைஞரின் கனவுகள் எனும் நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விவேகமான முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். மைபிபிபி கட்சியின் வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் கலைஞர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் டாக்டர் இருதயம் செபஸ்தியர் கலைஞர்களுக்கு சிறப்பு செய்தார். தொடர்ந்து, பி 40 மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனிடையே, கோலாம்பூர் கலைஞர்களுக்கு என்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இதர மாநில கலைஞர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.

