ஈப்போ, ஜூலை 12-
அவசர உலகத்தில் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரளவு மன மகழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று கிந்தா இந்திய சமூகநல விளையாட்டு , கலை பண்பாட்டு இயக்கம் நேற்று கோலாலம்பூர் அன்பு மலர்களே கலைக்குழுவின் ஆரவோடு நவரச கலை நிகழ்ச்சியை அனைவரும் கவரும் வகையில் நடத்தினார்.
இந்த நிகழ்வில் மலேசிய எம்.ஜி.ஆர், சிவாஜி, சரோஜாதேவி, ரஜினி, கமல்ஹாசான், ஜெயலலிதா என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பான படைப்புகளை படைத்தனர்.
இலவசமாக நடத்திய இந்நிகழ்வில் பொது மக்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கு வழி பரிசுகள் வழங்கப்பட்டன. வருகையளித்தவர்கள் மிகவும் குதுக்கலத்துடன் கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
அதனுடன் அனைவருக்கும் உணவுகளும் வழங்கப்பட்டன. இதனிடையே, கிந்தா இந்திய சமூகநல விளையாட்டு, கலை பண்பாட்டு இயக்கத்தின் தலைவர், பி.யுவராஜன், மக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை கொடுக்கும். கோவிட்டினால் வாய்ப்பு இழந்த கலைஞர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரி, ஏ.எஸ்.பி. இராஜன் இளம் தொழிலதிபர்களுக்கு சிறப்பு செய்தார். டத்தோஸ்ரீ டாக்டர் வி.சண்முகநாதன் (கண்ணாஸ் பம்பூ பிரியாணி) , டாக்கர் கே.தேவேந்திரன், மணியரசு ராமு, சுரேன்( ஆர்.எஸ்.மணி கிரேன்),கேசவன் கோபால், ஏ.கே.எஸ் டயர் சந்திரன், சம்பூர்ணா கச்சாங் பூத்தே நிறுவனம் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் டத்தோ தங்கராஜா, பேராக்மாநில ம.இ.கா இளைஞர் அணி தலைவர், தியாகசீலன், ஈப்போ தீமோர் ம.இ.கா தொகுதி தலைவர், சுகுமாறன், கோப்பிங் ம.இ.கா தொகுதி தலைவர், ஆர்.மகேந்திரன், பத்துகாஜா ம.இ.கா தொகுதி தலைவர் மூக்கன், ஈப்போ பாராட் ம.இ.கா

