Site icon அநேகன்

இளைஞர்களுக்கான தளம் அமைக்க மாபெரும் முயற்சியில் கோப்பிங் தமிழ் இளைஞர் மணிமன்றம்

கோப்பிங், ஜூலை 12-

இளைஞர்களின் மேம்பாட்டிற்கு தளம் அமைக்கும் முயற்சியாக கோப்பிங் தமிழ் இளைஞர் மணிமன்றம் மாபெரும் கட்டடம் ஒன்றை அமைக்கவுள்ளனர்.

கோப்பிங் தமிழ் இளைஞர் மணிமன்றம் தலைவர், ஜான் கென்னடி தலைமைத்துவத்தில் இந்த கட்டடம் கட்டப்படும் வேளையில் அக்கட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு மனித வள அமைச்சர், டத்தோ எம்.சரவணன் சிறப்பு வருகை புரிந்தார். இக்கட்டடம் க்டுவதற்காக 1 லட்சம் வெள்ளியை டத்தோ சரவணன் வழங்கினார்.

இதனிடையே, இந்த மாபெரும் முயற்சிக்கு தாம் என்றுமே உதவி செய்வதாக சரவணன் தெரிவித்தார்.

4 லட்சத்து 65,000  வெள்ளி செலவு கட்டப்படும் இக்கட்டட நிதிக்கு டத்தோ டி.மோகன் 20,000  வெள்ளி வழங்கினார். பேராக் மாநில ம.இ.கா தலைவர், டத்தோ இளங்கோ 10,000வெள்ளி, வழக்கறிஞர் மதியழகன்  5000 வெள்ளி வழங்கினார்.

இந்த அடிக்கல் நாட்டு விழா ஏற்பாட்டில் கோப்பிங் ம.இ.கா தொகுதியும் அதன் தலைவரும் ஆர்.மகேந்திரன் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version