Site icon அநேகன்

தியாகப் பெருநாள் முன்னிட்டு 1500 பேருக்கு இலவச பிரியாணி பொட்டலம்! – பினாங்கு தமிழ் வீதி சமூகநல அமைப்பு வழங்கினர்

பினாங்கு, ஜூலை 14-

அல்லாஹ்வின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என நபி இப்ராஹிம் தன்னுடைய சொந்த மகனை பலி கொடுக்க எண்ணம் கொண்டார். அவர் தியாகத்திற்கு மதிப்பளித்து இறைவன் பலி கொடுக்க செம்மறி ஆட்டை தயார் செய்தார். அதுவே தியாப் பெருநாள் உன்னதம். அதை கொண்டாடும் வகையில் பினாங்கு தமிழ் வீதி சமூகநல அமைப்பு 1500 பேருக்கு பிரியாணி பொட்டலம் வழங்கினார்.

தியாகப் பெருநாளில் 31 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, அதில் 450 கிலோ இறைச்சி கிடைத்தது. அதிலிருந்து 300  கிலோ இறைச்சியை ஏழை மக்களுக்கு பெருநாளுக்கு கொடுத்தோம். இன்று மிதமுள்ள இறைச்சியை வைத்து 1500 பேருக்கு பிரியாணி சமைத்தோம் என்று பினாங்கு தமிழ் வீதி சமூகநல அமைப்பு செயலாளர், நோர் முகமட் எஸ்.பி.கே அப்துல்லா கூறினார்.

இந்த பிரியாணி வழங்கும் நிகழ்வை 4 ஆம் ஆண்டாக  நாங்கள் நடத்துகிறோம். பெருநாளில் யாரும் பசியில் வாடக்கூடாது. அதுவே எங்கள் நோக்கம் . தியாப் பெருநாளில் மற்றவர்களின் பசியை போக்குவதும் முக்கியமே என்றார்.

இந்த நிகழ்வில் பினாங்கு தமிழ் வீதி சமூகநல அமைப்பு தலைவர், முகமட் அஸ்ரி முகமட் சீனி முகமட் , செயலவையினர் கலந்து கொண்டனர்

Exit mobile version