Site icon அநேகன்

சோதனை நடவடிக்கையின் போது 4ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த நபர் காயம்

காஜாங், ஆக.9-
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டச் சோதனை நடவடிக்கையின் போது தப்பிச் செல்வதற்காக 4ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த ஆடவர் ஒருவர் கால் முறிவுக்கு உள்ளானார். காஜாங்கில் ஹெந்தியான் காஜாங் வளாகத்தில் நேற்று நள்ளிரவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதர இருவருடன் தாம் குடியிருந்த வீட்டிலிந்து ஜன்னல் வழியாக 27 வயதுடைய இந்தோனேசிய ஆடவர் கீழே குதித்தார். அவ்வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள கூரையில் சிக்கிக் கொண்ட அந்த ஆடவர் மீண்டும் கீழே குதித்து தப்பியோட முயன்றபோது பிடிபட்டார்.

நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் காஜாங்கில் இரண்டு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அந்த ஆடவர் உட்பட 175 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ கைருல் ஸைமி டாவுட் தெரிவித்தார்.

Exit mobile version