ஈப்போ, ஆக. 23-
இங்குள்ள ஜெலாப்பாங் தாம்பாஹான் பாரு எனும் பகுதியில் அமைந்திருக்கும் தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்தைச் சுற்றி
வேலி அமைப்பதற்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர், வ.சிவகுமார் நிதியுதவி வழங்கியுள்ளார்.இந்த ஆலயத்திற்கு நிதியுதவி வழங்கிய சிவகுமாருக்கு ஆலயத்தின் தலைவர், தினகரன் சாரங்கபாணி நன்றி தெரிவித்தார்.
இந்த ஆலயம் கட்டப்ட்டு 52 வருடமாகி விட்டது. இது கிராமப்புறத்தில் கட்டப்பட்ட ஆலயமாகும். இந்த ஆலயத்தை
நாங்கள் புதுப்பித்து கட்டவுள்ளோம். அதற்கு மக்களிடமிருந்து நன்கொடையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.முடிந்தால்
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆலயத்தின் திருப்பணிகளைத் தொடங்க நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்.
ஆலயத்தை கட்டும் எங்கள் முயற்சிக்கு உதவி செய்ய விரும்புவர்கள் 012-4309779 என்ற எண்களுக்கு அழைக்கலாம்
என்றார் அவர். இந்த ஆலயத்தின் திருவிழா ஆடிபெருக்கின் போது நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஜெலாப்பாங்
சட்டமன்ற உறுப்பினர், சியா பாவ் ஹியானிற்கு சிறப்பு செய்யப்பட்டது.ஆடி பெருக்கின் போது ஸ்ரீ அன்னை தேவி
ஸ்ரீ மூகாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

