ராகாவில் வசனம் படம் பணம் போட்டியின் மூலம் – ரிம 12,000-இல் ஒரு பங்கை வெல்க
தா.சரளா தேவி
‘ராகாவில் வசனம், படம், பணம்!’ போட்டியைப்பற்றினச் சில விபரங்கள்
ராகா இரசிகர்கள் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 14, 2022 வரை ‘ராகாவில் வசனம், படம், பணம்!’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம12,000 ரொக்கப் பரிசில் ஒரு பங்கை வீட்டிற்கு வென்றுச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03 95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
ஒரு திரைப்பட உரையாடலின் ஆடியோத் துணுக்குப் பங்கேற்ப்பாளர்களுக்கு ஒலியேற்றப்படும். மேலும் 10 வினாடிகளுக்குள் ஆடியோத் துணுக்கு இடம்பெற்றத் திரைப்படத் தலைப்பைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.
சரியாகப் பதிலை யூகித்துக் கூறியப் பங்கேற்ப்பாளர்கள் ரிம200 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தப் பகுதிக்குப் பனிப்பந்தாகும்.