காஜாங், நவ.4-
நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதியை பக்காத்தான்
ஹராப்பான் கூட்டணி தக்க வைக்கும் என்று உலு லங்காட் பிகேஆர் தலைவர் ராஜன் முனுசாமி
தெரிவித்தார்.கடந்த பொதுத்தேர்தலில் உலு லங்காட் தொகுதியில் அமானா கட்சி போட்டியிட்டு
வெற்றி பெற்றது.
இம்முறை உலு லங்காட் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் முகமட் சானி ஹம்சான் களமிறங்கும்
நிலையில் இத்தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தக்க வைக்கும் என்பதில்
உறுதியாக உள்ளோம் என்று அவர் சொன்னார்.முகமட் சானி தற்போது தாமான் டெம்ப்ளர்
சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். உலு லங்காட் தொகுதியில் சிறந்த சேவையை ஆற்றி
வரும் முகமட் சானியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இத்தொகுதியில் ஏறத்தாழ 166,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 17,000 இந்தியர்களின்
வாக்குகளும் அடங்கும். இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கு கிடைக்க முழு
மூச்சுடன் நாங்கள் செயலாற்றுவோம் என்று அவர் மேலும் சொன்னார். முன்னதாக
இத்தொகுதியைக் கடந்த 3 தவணையாக பக்காத்தான் கூட்டணி தக்க வைத்து
வருகிறது.

