Site icon அநேகன்

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி

சுங்கை சிப்புட், நவ.5-
நீண்ட காலமாக மஇகாவின் கோட்டையாக விளங்கிய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் இத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.
இவரை எதிர்த்து பக்காத்தான் ஷராப்பான் சார்பில் எஸ்.கேசவன், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் டத்தோ இருதயநாதன், பெஜுவாங் சார்பில் அஹ்மாட் பவ்சி பின் முகமட் ஜபார், சுயேச்சை வேட்பாளர்களாக பஹாருடின் பின் கமாருடின், திருமதி இந்திராணி, ராஜா நரசிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நடப்பு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான எஸ்.கேசவன் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 5,607 வாக்குகள் பெரும்பான்மையில் இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதனிடையே, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜாலோங் சட்டமன்றத் தொகுதியில் லோ ஸீ யீ (பிஎச்), நாராண்யா சிங் (பெரிக்காத்தான் நேஷனல்), பான் சியான் சாங் (தேசிய முன்னணி), திருமதி இந்திராணி (சுயேச்சை) ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

Exit mobile version