Site icon அநேகன்

ஜெலுத்தோங் நாடாளுமன்றத்தை வெல்வதற்கு முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் டத்தோ லோகநாதன் வலியுறுத்தல்

செர்டாங், நவ.6-

32 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் ஐபிஎஃப் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்
தொகுதியை வெற்றி கொள்ள முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க
வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் வலியுறுத்தினார். இதற்கு
முன் நிலவிய பிரச்சினைகளால் பலர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

மனகசப்புகளை மறந்து ஐபிஎஃப் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபடும் பட்சத்தில் நமது
வெற்றியை உறுதி செய்ய முடியும். பொதுத்தேர்தலுக்குப் பின்னர் கருத்து பரிமாற்றங்கள் செய்து
குறைகளுக்குத் தீர்வு காணலாம் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற தேசிய முன்னணி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ள டத்தோ லோகநாதன் மேலும் சொன்னார்.

Exit mobile version