கோலாலம்பூர், நவ. 12
இன்று இரவு 7 மணிக்கு புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பத்மஸ்ரீ ஹரிஹரன் லைவ் இன் புத்ராஜெயா இசை நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வழங்குகிறது.
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “மலேசியர்களுக்கு விருப்பமான பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஆராய்ந்து வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
ஆஸ்ட்ரோ ரிவார்ட்ஸ் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடியுடன் பத்மஸ்ரீ ஹரிஹரன் லைவ் இன் புத்ராஜெயா அனுபவத்தை மலேசியர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தொடக்கப் படைப்பின் வழி உள்ளூர் திறமையாளர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு தளமாக இதைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதை வெற்றியடையச் செய்வதில் எங்களின் கூட்டாளர் மற்றும் ஆதரவாளரின் கூட்டாண்மைக்கும் ஆதரவிற்க்கும் நன்றி தெரிவிக்கிறேன் “என்றார்.
வீனஸ் புரோடக்ஷனின் இயக்குனர், சிவா ரமணா கூறுகையில், “வீனஸ் எப்போதும் ஓர் ஒருங்கிணைந்த கூட்டாண்மை அல்லது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம் மற்றும் ஆஸ்ட்ரோ மூலம் சிறப்புத் தள்ளுபடிக் கொண்ட டிக்கெட்டுகளை விருந்தினர்களுக்கு வெகுமதியாக அளிப்பதற்கான ஓர் ஆசீர்வாதமாகவும் வாய்ப்பாகவும் இந்தக் கூட்டாண்மையை நாங்கள் பார்க்கிறோம் ” என்றார்.
இசை ஜாம்பவானும் பின்னணிப் பாடகருமானப் பத்மஸ்ரீ ஹரிஹரன் கூறுகையில், “மலேசியா எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானது, இசையின் மூலம் மகிழ்ச்சியைப் பரப்ப நான் ஆர்வமாக உள்ளேன்.”
புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளரான ஆனந்தா ராஜாராம் தொகுத்து வழங்கும் இந்த நேரலை இசை நிகழ்ச்சியில் இசை ஜாம்பவான் மற்றும் இந்தியப் பின்னணிப் பாடகருடன் இணைந்துப் பாடும் ஹரிப்ரியா மற்றும் ஸ்ரீ நிஷா உள்ளிட்டப் புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர்கள் கலந்து சிறப்பிப்பர். பிரபல உள்ளூர் திறமையாளர்களானக் குமரேஷ் கமலக்கண்ணன் மற்றும் ஹஷ்மிதா செல்வம் ஆகியோரின் அற்புதமான தொடக்கப் படைப்பையும் இரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம். இந்த இசை நிகழ்ச்சில் மொத்தம் 27 பாடல்கள் இடம்பெறும். குறுக்கு சிறுத்தவளே, அன்பே அன்பே கொல்லாதே, என்னை தாலாட்ட, வெண்ணிலவே வெண்ணிலவே, உயிரே, மழை துளி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இரவா பகலா, அரிமா அரிமா மற்றும் காடு திறந்து உட்பட அவர் பாடிய 22 பாடல்களைப் பத்மஸ்ரீ ஹரிஹரன் இசை நிகழ்ச்சில் பாடுவார்.
பத்மஸ்ரீ ஹரிஹரன் லைவ் இன் புத்ராஜெயா இசை நிகழ்ச்சியின் ஆதரவாளர் போ டீ (BOH Tea) மற்றும் வீனஸ் புரோடக்ஷன் இணைந்து வழங்குகிறது. மேல் விபரங்களுக்கு AstroUlagam.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

