Site icon அநேகன்

சீரிய முடிவை எடுப்பீர்!-டத்தோஸ்ரீ சரவணன்

.தாப்பா, நவ.16-

 கடந்த 3  தவணைகள் தன்னை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த வாக்காளர்களுக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன்  நன்றி தெரிவித்தார்.

“2008  ஆம் ஆண்டு நான்  போட்டியிட்டபோது   ஏறக்குறைய 38,000 வாக்காளர்களைக் கொண்ட  தாப்பா நாடாளுமன்றம்  இன்று  15 ஆவது பொதுத் தேர்தலில்  62,000 வாக்காளர்களைக் கொண்ட  மிகப் பெரிய தொகுதியாக உருமாற்றம் கண்டுள்ளது” என்றார் சரவணன்.

இதுவரை இத்தொகுதியில்  தாம் ஆற்றிய சேவைகள்  கல்வி, பொருளாதாரம் , இலக்கியம், சமயம்  என எந்தெந்த நிலையில் தம்மால் செய்ய முடியுமோ அந்த விதத்தில் சேவையாற்றியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

யார் என்ன கேட்டாலும்  இல்லை என்று சொல்லாமல் அவர்களின் தேவைகள் மற்றும் கஷ்டங்களை உணர்ந்து உதவி புரிந்துள்ளேன்.

அதே சமயம், தமிழ்ப்பள்ளிகள்,இடைநி்லைப்பள்ளிகள்,யுஐடிஎம்  பல்கலைக்கழகம்  என  நமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தியிருப்பதோடு   கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (எச்ஆர்டிஎஃப்) வாயிலாக தொழில் பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன் என்றார். 

“இத்தேர்தல்  இந்திய சமுதாயத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியது. அனைத்து சமூகத்தினரின் மேம்பாட்டிற்கும் மிக முக்கியம். தாப்பா மக்களின் மேம்பாடு வாக்காளர்களின் கைகளில் உள்ளது. ஆகையால்,  சீரிய முடிவை எடுக்கும்படி வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் சரவணன்.

Exit mobile version