Site icon அநேகன்

எம்.பி. சம்பளம் மக்களுக்கே! -டாக்டர் சத்ய பிரகாஷ் உறுதி

உலு சிலாங்கூர், நவ. 16-


வரும் பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றால் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை உலு சிலாங்கூர் பக்காத்தான் நிதி அறவாரியத்தின் வழி வறிய நிலையில் வாடும் மக்களுக்குத் தான் வழங்கவிருப்பதாக இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன் கூறினார்.

“இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை தொகுதி ஏழை எளியோருக்காக வழங்குவேன்” என்றார்
டாக்டர் சத்ய பிரகாஷ்.

“எனது சம்பளத்தை அறவாரியத்திடம் ஒப்படைத்து வறிய மக்களுக்கு உதவுவேன் ” என்று தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கையில் குறிப்பிட்டார்.

உலு சிலாங்கூர் வாழ் மக்களின் நலனுக்காகத் தான் கடுமையாகப் பாடுபட்டு வருவதாகவும் இவர்களுக்குச் சேவையாற்றக்கூடிய ஒரு வாய்ப்பை வாக்காளர்கள் தனக்கு வழங்குவர் என்று தான் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

“எல்லாம் வல்ல இறைவனின் அருளால் மக்களின் ஆதரவோடு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்” என்றார் டாக்டர் சத்ய பிரகாஷ்.

Exit mobile version