கோலாலம்பூர், ஜன. 16-
இன்று ஜனவரி 16 மற்றும் நாளை 17 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய்) பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தொலைக்காட்சி தொடர் நாடகமான ‘நிஜம் தேடும் நிழல்’ தொடரின் இரண்டாம் மற்றும் 3-ஆம் பகுதிகள் ஒளியேறும்.
தமிழ், மலாய், சீன மொழி உரையாடல்களைக் கொண்ட இந்த ஒரு மணிநேர நாடகம் கார் விபத்து ஒன்றில் காலமாகும் ஒரு நீதிபதியின் மரணத்தை விசாரிக்க தொடங்கும் சிறப்பு துப்பறிவாளர் குழுவிற்கும் சமூக விரோதிக்கும் இடையிலான மோதல்களையும் சவால்களையும் அந்த சிறப்பு போலீஸ் குழுவினர் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை திரைப்படமாக விவரிக்கிறது. இது முற்றிலும் வித்தியாசமான 13 பகுதிகளைக் கொண்ட 1 மணிநேர தொடர்.
இதில் ஜலாலுடீன் ஹசான், ஹலீப், பென் ஜி, சிதம்பரம், சுரேஷ், உய், குணசேகரன், நிவாசன், தமிழ்ச்செல்வன், அலெக்ஸ், புனிதா, நவீனியா, கீதாஞ்சலி, பூமதி, கரு.கார்த்திக், பரஞ்சோதி, கவிதா சுப்பரமணியம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்தொடரை ஒளிப்பதிவு செய்திருப்பவர் சகாயம் சில்வன்.
சப்தம்ஸ் விஷன் தயாரிப்பில் உருவான ‘நிஜம் தேடும் நிழல்’ தொடரை பிரபல இயக்குனர் பிரான்சிஸ் சில்வன் இயக்கியுள்ளார் .
