Site icon அநேகன்

‘பயணம்@ஐலட்’ இன்று ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்பு காணுகிறது

‘

கோலாலம்பூர், பிப்ரவரி 10-
பிப்ரவரி 10, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் பயணம்@ஐலட் எனும் உள்ளூர் தமிழ் பயண விளையாட்டு நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கலாம்.

விளையாட்டு நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ஜோடி போட்டியாளர்களான, ஓர் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலமும் ஒரு சமூக ஊடகப் பிரபலமும் வெற்றியாளராக முடிச்சூடப் பல்வேறுப் பணிகளில் ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிடுவர். தேவகுரு சுப்பையா, சாந்தினி கோர், நித்யா ஸ்ரீ, ஸ்ரீ குமரன் முனுசாமி, கபில் கணேசன் மற்றும் பலரை உள்ளிட்டத் திறமையான உள்ளூர் கலைஞர்கள் மற்றும் சைரியா, பிரின்சஸ் மீதி, தகீட்ஸ், ஜென்னா சங்கீதா, மாலதி சிவகாமி மற்றும் பலரை உள்ளிட்டச் சமூக ஊடகப் பிரபலங்கள் ஆகியோர் போட்டியாளர்களாவர்.

உள்ளூர் திரைப்பட இயக்குநர் லோயேஸ்வரன் மகாலிங்கத்தால் இயக்கப்பட்டப் பயணம்@ஐலட் புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளரானச் சீலன் மனோகரனால் தொகுத்து வழங்கப்படும். 12 அத்தியாயங்களில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பாங்கோர் தீவு, ரெடாங் தீவு, தீயோமான் தீவு, லங்காவி தீவு, பெர்ஹென்டியன் தீவு உள்ளிட்ட வெவ்வேறு உள்ளூர் தீவுகளில் வெவ்வேறு ஜோடிப் போட்டியாளர்கள் போட்டியிடுவர்.

பயணம்@ஐலட்  நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வெள்ளி இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.  

Exit mobile version